Type to search

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா: ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் ஊழியர்கள்!

INDIA

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா: ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் ஊழியர்கள்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

{ Air India stuck financial crisis }

ஏர் இந்தியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதன் எதிரொலியாக அதன் ஊழியர்கள் ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியாவின் ஐந்து துணை நிறுவனங்களுக்கு சொந்தமான பங்குகளை விற்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான பணிகள் சூடுபிடித்தன. ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை.

இதனால் ஏர் இந்தியாவை தொடர்ந்து நடத்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதலே பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஏர் இந்தியா, தனது ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியத்தை இன்னும் தரவில்லை.

வழக்கமாக மாதத்தில் கடைசி நாளான 30 அல்லது 31ம் திகதிகளில் அந்த மாதத்திற்குரிய ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், மே மாத ஊதியம் இதுவரை கிடைக்காமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

Tags: Air India stuck financial crisis

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*வரும் சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு பயணம்!

*காலா வெளியிடும் தியேட்டருக்குள் புகுந்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு!

*ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் : தலைமைச் செயல் அதிகாரி தகவல்!

*நான் ஆயிரத்தில் ஒருவன் அல்ல; கோடியில் ஒருவன்!

*லஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! பாஜக எம்எல்ஏ

*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: