Type to search

தமிழ்நாட்டில் காலா படத்திற்கு தடை! – விநியோகஸ்தரர் கவலை!

Tamil nadu

தமிழ்நாட்டில் காலா படத்திற்கு தடை! – விநியோகஸ்தரர் கவலை!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ரஜினியின் காலா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. கடும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இப்படம் கர்நாடகாவில் ரிலீசாக இருக்கிறது. தமிழகத்திலும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது.kala film ban tamil Nadu – distributor worry

இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நாளை காலா படத்திற்குப் பதில் ஜூராசிக் வேல்டு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அத்தியேட்டரின் மேலாளர் கோபி அளித்துள்ள விளக்கத்தில், “காலா படக்குழுவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க விநியோகஸ்தர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க இயலாது என நாங்கள் மறுத்து விட்டோம். இதனால் காலா திரைப்படத்தை வெளியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம். அதற்குப் பதிலாக ஜுராசிக் வேர்ல்டு படம் நாளை கமலா தியேட்டில் ரிலீசாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், சென்னை உதயம் தியேட்டரிலும் காலா படத்திற்குப் பதிலாக ஜூராசிக் வேர்ல்டு படம் தான் ரிலீசாகிறது. மத்திய சென்னைப் பகுதியில் கமலா தியேட்டரும், உதயம் தியேட்டரும் மிக முக்கியமானவை. இந்த தியேட்டர்களில் காலா படம் ரிலீசாகததால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள காலா படத்தின் பி.ஆர்.ஓ ரியாஸ் அகமத், ‘வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் மட்டுமே உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை என்பதுதான் உண்மை” என தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags: