Type to search

ரயிலில் கூடுதலாக லக்கேஜ் எடுத்து சென்றால் 6 மடங்கு அபராதம்!

INDIA India Head Line

ரயிலில் கூடுதலாக லக்கேஜ் எடுத்து சென்றால் 6 மடங்கு அபராதம்!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

{ case luggage taken train 6 times fine }

ரயில்களில் அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்க வகை செய்யும் விதிமுறை கடந்த 30 வருடங்களாக அமலில் உள்ளது. அதன்படி படுக்கை வசதி கொண்ட வகுப்பில் பயணிப்பவர் 40 கிலோ வரை லக்கேஜை இலவசமாக கொண்டு செல்லலாம். அதற்கு மேலும் 40 கிலோ சுமையை உரிய கட்டணம் செலுத்தி லக்கேஜ்கள் வைக்கும் கம்பார்ட்மெண்டில் எடுத்துச் செல்லலாம்.

இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிப்பவர் 35 கிலோ வரை லக்கேஜை கட்டணமின்றியும், அதற்கு மேல் 70 கிலோ வரை லக்கேஜை உரிய கட்டணம் செலுத்தியும் எடுத்துச் செல்ல முடியும். ஏசி முதல் வகுப்பு பயணி 70 கிலோ வரையிலும், ஏசி இரண்டாம் வகுப்பு பயணி 50 கிலோ வரையிலும் லக்கேஜை இலவசமாக கொண்டு செல்ல முடியும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கொண்டு சென்றால் அபராதம் விதிக்கலாம் என்ற விதிமுறை 30 ஆண்டுகளாக அமலில் இருந்தாலும் அது தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டதில்லை.

இந்நிலையில் கூடுதலாக லக்கேஜ் எடுத்துச் செல்பவர்களுக்கு பார்சல் கட்டணத்தை விட 6 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் இந்த வாரம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெறுகிறது. சில பயணிகள் கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்வதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரயிலில் அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு ஆறு மடங்கு அபராதம் விதிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Tags: case luggage taken train 6 times fine

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்!

*10 வருடம் பழமைவாய்ந்த 13 கிலோ மனுக்கள்: தலையில் சுமந்து வந்த மூதாட்டி கடலூரில் ஒரு கண்ணீர் சம்பவம்

*இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!

*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!

*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: