Type to search

லஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! பாஜக எம்எல்ஏ

INDIA India Head Line

லஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! பாஜக எம்எல்ஏ

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

{ Beat royal officers bribe BJP MLA }

அரசு அதிகாரிகள் லஞ்சம் தருமாறு கேட்டால், அவர்களை செருப்பால் அடியுங்கள் என்று உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சூரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பைரியா வட்டாட்சியர் அலுவகத்தில் லஞ்சம் வாங்கிய அலுவலர்களைக் கண்டித்து, சுரேந்திர சிங் சார்பில் இன்று எச்சரிக்கைவிடும் தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறியதாவது: அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால், அவர்கள் பேசுவதை பதிவு செய்யுங்கள்.

பின்னர், அவர்களை என் முன்னால் கொண்டு வாருங்கள். அப்படியும் அவர்கள் வேலை செய்யத் தவறினால், அவர்கள் முகத்தில் குத்துவிடுங்கள். இதை மீறியும், அவர்கள் உரிய வேலையை செய்யவில்லை என்றால் அவர்களை செருப்பால் அடியுங்கள்.

பொதுமக்களின் நலனுக்காக தான் நான் இவ்வாறு கூறுகிறேன். இதற்கு எதிர்ப்பு வந்தால் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்.

உத்தரப் பிரதேச அமைச்சரவையிலிருந்து சில அமைச்சர்களை நீக்காவிட்டால், அரசின் பெயர் நிச்சயம் கெடும். காவல் நிலையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் குறைகள் கேட்டறியப்படாவிட்டால், அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றார் சுரேந்திர சிங்.

முன்னதாக, சுரேந்திர சிங் ஏற்கெனவே சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலை இஸ்லாமுக்கும், பகவானுக்கும் இடையிலான யுத்தம் என்று அவர் கூறியிருந்தார்.

மேலும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ராவணணின் தங்கை சூர்ப்பனகையைப் போன்றவர் என்றும், பிரதமர் மோடியை பகவான் ராமரின் மறுஅவதாரம் என்று சுரேந்திர சிங் கூறியிருந்தார்.

Tags: Beat royal officers bribe BJP MLA

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்!

*10 வருடம் பழமைவாய்ந்த 13 கிலோ மனுக்கள்: தலையில் சுமந்து வந்த மூதாட்டி கடலூரில் ஒரு கண்ணீர் சம்பவம்

*இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!

*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!

*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: