Type to search

​பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது!

India Top Story Tamil nadu

​பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவி பிரதீபா 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் நீட் தேர்வில் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.Pratibha’s body handed parents

இதுகுறித்து கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற போதிலும் அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவ கல்லூரியில் தான் இடம் கிடைத்துள்ளது. இதற்கு பணம் இல்லாததால் இந்த ஆண்டும் நீட் தேர்வை எழுதியதாக பிரதீபாவின் சகோதரி மற்றும் தந்தை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக பிரதீபாவின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டது. ஆனால் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும், பிரதீபா குடும்பத்தாருக்கு அரசு வேலை வேண்டும், நிதியுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பிரேத பரிசோதனைக்கு ஒத்துக்கொள்வோம் எனக்கூறி பிரதீபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, எஸ்.பி.ஜெயக்குமார் இருவரும் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து அங்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர். ஆனால் வாக்கு வாதம் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாவட்ட எஸ்.பி.பொன்னி பிரதீபாவின் பெற்றோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவி பிரதீபாவின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் பெருவலூர் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள கிராமத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: