Type to search

நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி – கீர்த்தனா!

India Head Line Tamil nadu

நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி – கீர்த்தனா!

Share
  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    33
    Shares

மருத்துவப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 9ம் தேதிமுதல் வழங்கப்பட்டு மார்ச் 12ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 13,26,725 பேர் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்த 2017ம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்ததை விட 16.49% கூடுதலாகும்.Keerthana best female student Tamil Nadu

இந்நிலையில் கடந்த மே மாதம் 6ம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 12,69,922 பேர் (95.71%) எழுதினர். 56,803 பேர் (4.28%) தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வின் போது தமிழக மாணவர்கள் பலருக்கு தமிழகத்திற்கு வெளியே ராஜஸ்தான், கேரளா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது, தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 12ம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    33
    Shares
Tags: