Type to search

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

INDIA India Head Line

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

(janauray 1st tamilnadu plastic porutkal stopded)

உலக சுற்றுச் சூழல் தினமான இன்று 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில்  அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், அடுத்த ஆண்டு  ஜனவரி முதல் தமிழகத்தில் தடிமனான பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும்  பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் மற்றும் பிளாஸ்டிக் குடம் ஆகியவற்றை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக  அறிவித்துள்ளார்.

மேலும் ,  ஒரு  முறை  பயன்படுத்தி  தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், நிலங்களில் தேங்கிவிடும்போது தண்ணீர் மாசடைகிறது. மழைநீர் பூமியில் கசிந்து நிலத்தடி நீரினை சென்றடையாமல் போவதால நிலத்தடி நீர்மட்டம்  உயர்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கும்போது கொசு உற்பத்தியாகி  அதன் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் உருவாகின்றன.

அதோடு , கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் உயிரிழப்புக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகி விடுகின்றன. மனித உயிருக்கும், சுகாதாரத்துக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கின்றன.

மற்றும் ,  2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடைக்கு பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத சூழலை உருவாக்குவோம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

tags;-janauray 1st tamilnadu plastic porutkal stopded

More Tamil News

Tamil News Group websites :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags:

You Might also Like