Type to search

நண்பனைக் கொன்று தானும் தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர் – நடந்தது என்ன!

India Head Line Tamil nadu

நண்பனைக் கொன்று தானும் தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர் – நடந்தது என்ன!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

{ young man killed friend suicide }

சென்னை அண்ணா சாலை சிம்சன் பின்புறம் ரிச்சி தெரு உள்ளது. இதை அந்த காலத்தில் ரேடியோ மார்க்கெட் என்று அழைப்பார்கள். தற்போது செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் உபகரணங்கள் விற்கும் முக்கிய கேந்திரமாக உள்ளது.

இங்கிருந்து ஆந்திரா மற்றும் தமிழக மாவட்டங்களுக்கு செல்போன் உதிரி பாகங்கள், கம்ப்யூட்டர், லாப்டாப், எல்.இ.டி டிவிக்கள் என அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றது.

வடமாநிலத்தவர், பஞ்சாபிகள், கொஞ்சம் தமிழர்கள் என முதலாளிகள் கடை வைத்திருக்கும் இந்த பகுதியின் அருகிலேயே நரசிங்கபுரம் என்னும் சாதாரண குடிசைப்பகுதி உள்ளது. இங்குள்ள கடைகளில் பணியாற்ற ஏராளமான இளைஞர்கள் இந்த குடிசைப்பகுதிகளிலிருந்து வருகின்றனர்.

நரசிங்கபுரம் குடிசைப்பகுதியை சேர்ந்த பிரபு(28) என்பவரும் சரவணன்(30) என்பவரும் வேலைக்கு வந்துள்ளனர். இருவரும் நல்ல நண்பர்கள் சிறுவயது முதல் ஒன்றாக பழகியவர்கள். ஒரே இடத்திலும் வேலை செய்து வந்துள்ளனர்.

இருவரின் நட்பும் நெருக்கமாகி இருவரும் எங்கு போனாலும் இணைபிரியாமல் சென்று வந்துள்ளனர். இவர்களை பார்ப்பவர்கள் நண்பர்கள் என்று சொல்ல மாட்டார்கள், தம்பதிகள் போகிறார்கள் பார் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதற்கிடையே 6 மாதத்துக்கு முன் இருவருக்கும் திடீரென மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் விரோதமாக பார்க்கத் துவங்கியுள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கு பெரிதாகி நாளடைவில் பேசாமலேயே இருந்துள்ளனர்.

ஏரியாவில் ஒன்றாக பழகி இணை பிரியாமல் வளம் வந்த இவர்களுக்கு என்ன ஆச்சு என்று அக்கம்பக்கத்தவர் கேட்டும் இருவரும் ஒன்றும் சொல்லாமல் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு பிரபு மட்டும் கடையில் இருந்துள்ளார். அப்போது சரவணன் ஒரு முடிவோடு பிரபுவுடன் பேசி சண்டையிட்டுள்ளார்.

இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த சரவணன் பிரபுவின் வாய், காது, கையை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். நண்பனை கொன்ற சரவணனும் அதே இடத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

காலையில் கடையை திறக்கவந்த பெண் ஊழியர் கடை திறந்து இருப்பதும் இரண்டு ஊழியர்களும் பிணமாக கிடப்பதையும் பார்த்து அலறி அடித்து உரிமையாளருக்கு கூற அங்கு வந்த கடையின் உரிமையாளர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் விசாரணையில் சரவணன், பிரபு இருவருக்கும் இடையே தீவிர நட்பு இருந்ததும் திடீரென பிரபு பேசாமல் ஒதுங்கி போனதால் சரவணனுக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

Tags: young man killed friend suicide

More Tamil News

Tamil News Group websites :


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags:

You Might also Like