Type to search

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீரென மாயம்!

Breaking News INDIA India Top Story

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீரென மாயம்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென் ஆப்பிரிகாவிற்கு சென்றார். இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஐஎப்சி 31 ரக விமானத்தில் சென்றார். மதியம் 2 மணியளவில் அவரது விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. தென்னாப்பிரிக்கா செல்லும் வழியில் மொரிஷியஸ் நாட்டில் அதிகாரிகளை சந்திக்க சுஷ்மா சுவராஜ் திட்டமிட்டிருந்தார்.Sushma Swaraj suddenly vanishes

அதன்படி திருவனத்தபுரத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சென்னை வான் எல்லையை தாண்டியதை சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்தது.

அதனை தொடர்ந்து மொரிசியஸ் கடல் பகுதிக்குள் மாலை 4.44 மணிக்கு நுழைந்த விமானம் மொரிசியஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் பதற்றமடைந்த மொரிசியஸ் அதிகாரிகள் உடனடியாக டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அளித்தனர். வழக்கமாக கடல் பகுதிக்கு மேல் விமானம் செல்லும்போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை எனில் அந்த பிராந்தியத்தில் உள்ள விமான நிலையக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் 30 நிமிடங்கள் வரை காத்திருப்பார்கள். ஆனால், மொரிஷியஸ் அதிகாரிகள், 14 நிமிடங்கள் தொடர்பு கிடைக்காத நிலையில் எச்சரிக்கை மணியை ஒலித்ததால் அங்கு பதற்றம் அதிகமாகிவிட்டது.

திருவனந்தபுரம், டெல்லி, சென்னை, மொரிஷியஸ் பகுதிகளை சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் விமானத்தின் நிலையை அறிய தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். பிறகு 4.58 மணிக்கு மொரிஷியஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துக்கு விமானத்தின் தொடர்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து மொரிஷியஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அங்கு அதிகாரிகளை சந்தித்த சுஷ்மா சுவராஜ் திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: