Tamil News Group websites :
Technotamil.com
Tamilhealth.com
Sothidam.com
Cinemaulagam.com
Ulagam.com
Tamilgossip.com
{ open sterile plant anymore }
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை புறக்கணித்த திமுகவினர், தனது நிலையை மாற்றிக் கொண்டு இன்று பேரவைக்கு வந்தனர். இந்நிலையில், சட்டப் பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தாமிர உருக்காலை தமிழகத்திற்கு தேவையில்லை என்று சட்டப்பேரவையில் ஒருமித்த தீர்மானம் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 20 லட்சம் ரூபாயை, ஒரு கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், போராடியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை வெளியிடுவதற்கு முன்பு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
ஆலை இயங்காத வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும், யாராலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்களை தான் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்றும், உரிமைக்காக போராடியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டிலேயே அதிக போராட்டம் நடைபெறுவது தமிழகத்தில் தான் என தெரிவித்த முதலமைச்சர், போராட்டத்திற்கு அனுமதி அளித்து பாதுகாப்பு கொடுத்தும் பெட்ரோல் குண்டுகளை காவல் வாகனத்தின் மீது போடுகின்றார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
More Tamil News
*துணை முதல்வர் ஓபிஎஸ் இன் வேண்டுகோள்!
*காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!
*கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்!
*‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!
*மரத்தினாலான சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர் – தமிழன்டா!
*சிறுமிக்கு பாலியல் தொல்லை – ரயில்வே அதிகாரி கைது!
Tamil News Group websites :
Technotamil.com
Tamilhealth.com
Sothidam.com
Cinemaulagam.com
Ulagam.com
Tamilgossip.com