Type to search

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் – எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு!

INDIA

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் – எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரைப் புறக்கணித்த என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.Legislative Budget meeting – MLAs walk

காலை தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை  பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை எனக்கூறியும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியும், என்.ஆர். காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ரெங்கசாமி, அறிவித்த திட்டங்களை மாநில அரசு இதுவரை செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.

இதனிடையே, பா.ஜ.க.  நியமன எம்.எல்.ஏக்களான சுவாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர், தங்களையும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களை பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பியவாறே ஊர்வலமாக சென்று சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

More Tamil News

Tamil News Group websites :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: