காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!
Share

ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்து உருவாகியிருக்கும் காலா படம் வரும் 7 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Kalava? – wizard? – Karnataka people
இந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் படத்தை திரையிடப்போவதில்லை என கோல்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து தற்போது கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வரூபம்- 2 படத்திற்கும் தடை விதிப்போம் என கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.
ரஜினிகாந்த், மற்றும் கமல்ஹாசன் இருவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் கன்னட அமைப்புகள் இவர்களின் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளன.
இன்று கர்நாடக முதல்வரை சந்திக்க பெங்களூரு சென்றிருக்கும் கமல்ஹாசன் சினிமா சம்பந்தமாக எதையும் பேசப்போவதில்லை என சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த குமாரசாமியும், கமலஹாசனும் காவிரி விவகாரம் குறித்து மட்டும் பேசியதாக தெரிவித்தனர்.
More Tamil News
- கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்!
- ‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!
- மரத்தினாலான சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர் – தமிழன்டா!
- சிறுமிக்கு பாலியல் தொல்லை – ரயில்வே அதிகாரி கைது!