Type to search

பசுமை வழிச்சாலை திட்டம் – போராட்டம் வெடிக்க வாய்ப்பு!

India Head Line Tamil nadu

பசுமை வழிச்சாலை திட்டம் – போராட்டம் வெடிக்க வாய்ப்பு!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

சென்னை – சேலம் இடையே 275 கி.மீ தொலைவிலான பசுமை வழி நெடுஞ்சாலை திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. ரூ.11,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கு சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2300 ஹெக்டர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள அரசு 100 ஹெக்டர் வனப்பரப்பையும் அழிக்க முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் கடும் புகார் தெரிவித்துள்ளனர்.Green Planet Scheme – Opportunity Crackdown

மேற்கண்ட திட்டத்தை மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி ஒருமித்த கருத்துடன் மக்கள் சம்மதித்தால் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த 8 வழி பசுமை சாலையை 21 மாதங்களிலே நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த திட்டத்தை எப்படியும் தடுத்தே தீருவது என்ற முடிவில் இதுவரை 150 கிராம குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களோடு 26 அமைப்புகளும் சேர்ந்து பசுமை வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திட்டமானது பன்னாட்டு நிறுவனங்களுக்காக செயல்படுத்தப்பட உள்ள திட்டம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: