Type to search

​பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

Tamil nadu

​பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முரம்பு ஆசிலாபுரம் பகுதியில், பிளாஸ்டிக் சாக்குகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.fire accident plastic factory Rajapalayam

இதுகுறித்து இந்த ஆலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்குகள், பாலிதீன் கவர்கள் உள்ளிட்ட 11 டன் எடையிலான, பல கோடி ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்ததும், 5 வாகனங்களில் சென்ற 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். தீ விபத்து காரணமாக, அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மின்கசிவு காரணமாக, இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

More Tamil News

Tamil News Group websites :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: