Type to search

சிறுமிக்கு பாலியல் தொல்லை – ரயில்வே அதிகாரி கைது!

India Head Line Tamil nadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை – ரயில்வே அதிகாரி கைது!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டி.டி.ஆர் கைது செய்யப்பட்டுள்ளார். டி.டி.ஆர் அனிஷ் குமாரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ddr sexual harassment arrested

சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 6 வயது மகளுடன் கோவையில் இருந்து சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தது.
அந்த ரயில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை அருகே வந்த போது அதே ரயிலில் பணியில் இருந்த கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த டி.டி.ஆர் அனிஷ் குமார் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இந்த சம்பவத்தை பற்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் புகார் செய்துள்ளனர். டி.டி.ஆர்.அனிஷ் குமாரை கைது செய்து  ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: