Type to search

​டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

Tamil nadu

​டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

Diesel price rises risk losing jobs depending lorry industry

தமிழகத்தில் சேலம் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பலரது பொருளாதார நிலை உயர்வதற்கு காரணமாக இருந்தது லாரி தொழில் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. டீசல் விலையேற்றம், வாடகை பிரச்னை, சுங்க கட்டண உயர்வு, காப்பீடு கட்டண உயர்வு உள்ளிட்டவையே இதற்கு காரணம் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கால கட்டத்தில் லாரியை வைத்து தொழில் செய்து சிறப்பாக வாழ்ந்து வந்ததாகவும்,  தற்போது டீசல் விலை காரணமாக அதை பழைய இரும்பு கடைக்கு போட்டுவிட்டு ஓட்டுனராக வேலை செய்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார் நாமக்கல்லைச் சேர்ந்த ராஜகோபாலன். கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் டீசல் லிட்டருக்கு 58.11 காசுகளுக்கு ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்போது டீசல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனையடுத்து லாரி உரிமையாளர்களுக்கு எரிபொருள் வகையில் ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகிறது. இதேபோன்று டயர் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலை உயர்வு என அடுக்கடுக்கான ஆண்டு பராமரிப்பு செலவு மட்டும் இரண்டு லட்ச ரூபாயை தாண்டியுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் லாரிகள் உள்ள நிலையில் தற்போது 2.5 லட்சம் லாரிகள் மட்டுமே இயக்கப்படுகிது. டீசல் விலையை குறைக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யப்பட்டால் மட்டுமே லாரி தொழிலை காப்பாற்ற முடியும் என்பதே உரிமையாளர்களின் கூற்றாக உள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: