Type to search

​தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 காவலர்கள் தற்கொலை!

Tamil nadu

​தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 காவலர்கள் தற்கொலை!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

3 suicide deaths Tamil Nadu yesterday

தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் அதிகம் விமர்சனத்துக்குள்ளாக்கப்படும் துறை – அரசியல் அதிகாரத்திற்கும், மக்களுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் காவலர்கள் இங்கு ஏராளம். அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களின் கட்டளைகளை நிறைவேற்றவதற்கான போராட்டம் ஒருபுறம். மேலும் குடும்ப அழுத்தங்கள் ஒருபுறம், பொதுமக்களின் வசை மொழி மறுபுறம் என இருதலை கொள்ளியாக தவித்து வருகின்றனர் சாதரண காவலர்கள் இது போன்ற காரணங்களால் தான் நேற்று ஒரே நாளில் 3 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்னை, கிருஷ்ணகிரி, திருப்பூர் என ஆங்காங்கே நடந்துள்ள இந்த தற்கொலைகள் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் காந்திமதி. விடுமுறை நாள் என்பதால் வீட்டிற்கு சென்ற காந்திமதி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சொல்லப்படும் காரணம் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை என்பதே. காந்திமதிக்கும், அவரது கணவர் முருகனுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாகவும் அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த மோகன், திருப்பூர் மாநகர காவலர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ரயில் தண்டவாளத்தில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதற்கான காரணம் என்ன என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது. இதற்கெல்லாம் உச்சமாக பூந்தமல்லியில் நடந்த நிகழ்வு. மத்திய ரிசர்வ் போலீஸ்படை பயிற்சி மையத்தைச் சேர்ந்த காவலர் ராஜேஷ்குமார் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொண்டார். பணி நேரத்தில் ராஜேஷ்குமார் செல்போன் பேசியதாக உயரதிகாரிகள் திட்டியதக கூறப்படுகிறது. , இதனால் அவர் தற்கொலைச் செய்துக் கொண்டாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த 3 நிகழ்வுகளையும் காவல்துறை அவ்வளவு எளிதாக கடந்து சென்று விட கூடாது என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பும். காவலர்கள் தற்கொலைகளுக்கான காரணத்தை கண்டறிந்து விடை தேட வேண்டியது காவல்துறையின் ஒட்டு மொத்த பொறுப்பு,

மத்தளத்திற்கு கூட இருபக்கம் தான் அடி ஆனால் காவலர்களுக்கு திரும்பிய பக்கம் எல்லாம் அடி என்கிற நிலைதான் தற்போது நிலவி வருகிறது. அதன் வெளிப்பாடுதான் ஒரே நாளில் 3 காவலர்கள் தங்களது இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர். அதற்காக சொல்லப்படும் காரணங்கள் என்னவாக இருந்தாலும் தீர்வு என்ன என்பதே தற்போது எழும் கேள்வி.

More Tamil News

Tamil News Group websites :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: