Type to search

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!

Tamil nadu

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!

Share
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares

wife killed husband boy friend tamilnadu

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோயில் ஜானகிராமன் தெருவை சேர்ந்த அறிவழகன் எலட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த 15 வருடங்குக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த பி.எட். பட்டப்படிப்பு படித்த ரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு அஸ்வின் மற்றும் ஹரிஹரன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே அறிவழகன் வீட்டு பகுதியில் கட்டிட வேலைக்கு வந்த ராஜசேகருடன் ரேகாவுக்கு பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. அறிவழகன் அடிக்கடி வெளியூருக்கு சென்ற நிலையில் இதை பயன்படுத்திய ராஜசேகர் இரவு நேரங்களில் தனியாக இருக்கும் ரேகாவை சந்திக்க வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த விசயம் அறிவழகனுக்கு தெரிய வரவே அவர் ரேகாவை கண்டித்துள்ளார். இதனால் அறிவழகன் உயிரோடு இருப்பது தங்களுக்கு இடையூறு என நினைத்த ரேகா தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து அறிவழகனை தீர்த்துக் கட்ட திட்டமிட்டனர். அறிவழகன் உறங்கிக் கொண்டிருந்த போது காதலனுடன் சேர்ந்து கட்டையால் அடித்து கொன்று விட்டு உறக்கத்தின் போது மாரடைப்பால் இறந்து விடடதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் அறிவழகன் அடித்துகொள்ளப்பட்டது தெரியவந்தது. உஷார் அடைந்த செம்பனார்கோயில் போலீசார் நடத்திய விசாரணையில் ரேகா கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares
Tags: