Type to search

துப்பாக்கிச் சூட்டில் பலியான பேய்க்குளம் தொழிலாளி உடல் அடக்கம்!

Tamil nadu

துப்பாக்கிச் சூட்டில் பலியான பேய்க்குளம் தொழிலாளி உடல் அடக்கம்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

Bayer worker’s body buried firearm

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சாயர்புரம் அருகே இருவப்பபுரம் பேய்குளத்தை சேர்ந்த பலவேசம் மகன் செல்வசேகர் (40) காயமடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று இரவு உறவினர்களிடம் கொடுக்கப்பட்ட அவரது உடல் போலீஸ் பாதுகாப்புடன் பேய்குளம் வீட்டுமுன் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஊர் அருகேயுள்ள மயானத்தில் பாஸ்டர் சாமுவேல் ஜெபராஜ் நடத்திய ஜெபத்துக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் இருந்து பேய்க்குளம், சிவத்தையாபுரம் சாலை வழியாக செல்லும் போக்குவரத்துது அவ்வழியாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் புதுக்கோட்டையில் இருந்து கூட்டாம்புளி, சேர்வைகாரன்மடம் வழியாக விடப்பட்டன.

More Tamil News

Tamil News Group websites :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: