Type to search

​போலீஸாரை தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது!

India Head Line Tamil nadu

​போலீஸாரை தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக கடந்த மாதம் 10ம் தேதி சேப்பாக்கம் மைதானம் அருகே பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. attacked police arrested Tamil party

இதில் காவலர் ஒருவரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தில் சங்கர் நகர் காவல் நிலைய காவலர் செந்தில்குமார் மீது கொடூர தாக்குதல் நடத்தியவரை போலீசார் தேடிவந்தனர்.

தாக்குதல் நடத்தியவர் எண்ணூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மதன்குமார் என தெரியவந்ததை அடுத்து பாரிமுனையில் வைத்து அவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் காவலர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: