Type to search

கேரளா – செங்கனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அமோக வெற்றி!

INDIA

கேரளா – செங்கனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அமோக வெற்றி!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

Marxist Communist candidate kerala Chengannur

கேரளாவில் நடந்து முடிந்த செங்கனூர் சட்டபேரவை இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சாஜி செரியான் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில்  அமோக வெற்றி பெற்றுள்ளர்.

கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில்  இடது ஜனநாயக முன்னணி சார்பில் நிறுத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்  சாஜி செரியன் 67,303 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் 46347 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் பிள்ளை 35270 வாக்குகள் பெற்றார். சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில்  ராமச்சந்திரன் நாயர் 7983 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பல வருடங்களுக்கு பிறகு மீட்டெடுத்த தொகுதி.  ராமச்சந்திரன் நாயர் அவர்களின் வெற்றியை சாதியின் பெயரிலான வெற்றி என்று ஏளனம் செய்த காங்கிரஸ் பாஜக ஊடக சின்டிகேட்டினை துவம்சம் செய்திருக்கிறது தோழர் சஜி செரியான் அவர்களின் வெற்றி.  பாஜகவின் வாக்குகள் 42682-லிருந்து 35270 ஆக மோடியின் பிராகிரஸ் ரிப்போர்ட் போல வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: