Type to search

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிராக்கள் – தமிழக அரசு நடவடிக்கை!

Tamil nadu

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிராக்கள் – தமிழக அரசு நடவடிக்கை!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CCTV cameras TASMAC stores – TN government

சட்டப்பேரவையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானியக் கோரிக்கையை அமைச்சர் தங்கமணி இன்று தாக்கல் செய்தார். அப்போது, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பு, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டது. அதில், மதுவிற்பனை இல்லாத நாட்கள் 5லிருந்து, 8ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகளில், ஆயிரத்து 250 கடைகளில், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மூடப்பட்ட ஆயிரம் சில்லறை மதுபான விற்பனை கடைகளில் பணிபுரிந்த பணியாளர்கள், நியாய விலை கடை விற்பனையாளர்கள் உள்ளிட்ட தகுந்த பணியிடங்களில், மீள பணியமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-2017ஆம் நிதியாண்டில், 26 ஆயிரத்து 995 கோடி ரூபாயாக இருந்த வருவாய், 2017-2018ஆம் நிதியாண்டில், 26 ஆயிரத்து 794 கோடி ரூபாயாக குறைந்திருப்பது, கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ள அட்டவணை மூலம் தெரியவந்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: