Type to search

​அரசுப்பள்ளிகளை மூடப்போகுதா தமிழக அரசு – செங்கோட்டையன் பதில்!

INDIA

​அரசுப்பள்ளிகளை மூடப்போகுதா தமிழக அரசு – செங்கோட்டையன் பதில்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

Tamilnadu closed government schools – Senkotiyan

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் செம்மலை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அங்கன்வாடி மையங்களுடன் ஒருங்கிணைந்து உள்ள ஆரம்பப் பள்ளிகளில் 90 சதவிகிதம் மாணவர்கள் படிப்பதாகக் கூறினார். ஐந்து வயது பூர்த்தியானால் மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்க்க முடியும் என்ற விதி உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் 4 வயதுக்கு முன்னரே குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக உரிய சட்டவிதிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபடக் கூறினார். தொலைதூரங்களில் இருந்து பணியாற்றக்கூடிய பகுதிநேர ஆசிரியர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற அந்தந்த சங்கங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: