Type to search

ஈரப்பதம் குறைந்த காற்று வீசியதால் வெப்பம் அதிகரித்துள்ளது – வானிலை மையம் விளக்கம்!

INDIA

ஈரப்பதம் குறைந்த காற்று வீசியதால் வெப்பம் அதிகரித்துள்ளது – வானிலை மையம் விளக்கம்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

humidity decreased low winds – weather center explanation

வடதமிழகத்தில் சில மாவட்டங்களில் ஈரப்பதம் குறைந்த காற்று வீசியதால் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் விளக்கமளித்துள்ளது. இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் மியான்மர் கடற்கரையை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தென்மேற்குப் பருவமழையை பொறுத்தவரையில் கோவை, கொடைக்கானல், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறில் 5 செ.மீ மழையும், வால்பாறையில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்ற நிலையில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை தரைக்காற்று வீசியதன் காரணமாக வடதமிழகத்தின் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. இது இயல்பை விட 3ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணயில் 43.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: