Type to search

டுவிட்டரும் பயனாளிகளிடம் மோசடி?

Top Story USA WORLD

டுவிட்டரும் பயனாளிகளிடம் மோசடி?

Share

Twitter Cambridge Analytica

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம், பேஸ்புக்குடன் இணைந்து நடத்திய தகவல் திருட்டு சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இவ்விவகாரம் தொடர்பில், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா மற்றும் பேஸ்புக் நிறுவனம் ஆகியன விசாரணைக்கு முகங்கொடுத்தமை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், டிவிட்டர் நிறுவனமும், தகவல் திருட்டின் பிரதான சூத்திரதாரியான அலெக்சாண்டர் கோகனின், ஜி.எஸ்.ஆர் நிறுவனத்துக்கு தகவல்களை விற்றுள்ளதாக தகவல் வெளியாகி பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

ஒரு அப்ளிகேஷன் ஊடாக கேம்பிரிட் அனாலிட்டிக்கா நிறுவனம் தகவல்களை திருட மூளையாக செயற்பட்டவர் பேராசிரியர் கோகன், என தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், அவரது ஜி.எஸ்.ஆர் நிறுவனம் , டுவிட்டர் நிறுவனத்திடமிருந்து ஒரு தடவை அதன் ‘ஏபிஐ’ அனுமதியை பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனூடாக டிசம்பர் 2014 முதல் – ஏப்ரல் 2015 வரையான காலப்பகுதியில் பொதுவெளியில் பகிரப்பட்ட டிவிட்டுகளின் மாதிரிகளை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தாம் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் பிரகாரம், பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பெறப்படவில்லை என்ற விபரம் தெரியவந்துள்ளதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.

கருத்துப்போக்குகள், பலதரப்பட்ட நிகழ்வுகளின் போதான போக்குகளை அறிந்துகொள்ளல், குறிப்பிட்ட சில தலைப்புகள் தொடர்பில் நிலவும் கருத்துக்களை அறிந்துகொள்ளல் போன்ற காரணங்களுக்காக டிவிட்டர், தமது ஐக்கான அனுமதியினை பல நிறுவனங்களுக்கு டுவிட்டர் வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் டுவிட்டரில் உள்ள பாவனையாளர்கள் தொடர்பான தகவல்கள் பேஸ்புக்கில் உள்ளதைப் போல ஆழமானதல்லவென சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும் பேஸ்புக்கைப் போல அந்தரங்கமானதல்லவென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை டிவிட்டரிடமிருந்து ஜி.எஸ்.ஆர் பெற்றுக்கொண்ட தகவல்கள் தம்மால் கொள்வனவு செய்யப்பட்டதோ அல்லது உபயோகப்படுத்தப்பட்டதோ அல்லவென கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா மற்றும் அதனுடாக நிறுவனங்கள் எதுவும் தம்மிடம் விளம்பரம் செய்வதை டுவிட்டர் நிறுத்தியுள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா, நிறுவனத்தின் கொள்கைகள் முரண்படுவதாக கூறியே டுவிட்டர் இம்முடிவை எடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *